தெய்வத்தின் அருள் இருந்தால்,பணிவு நிறைந்த மகன் பிறப்பான்,ஆனால் தெய்வம் நேராக வந்தால்,அழகிய பெண் குழந்தையாக வருவாள். பெண் குழந்தை – பூமியின் வாரிசு,அவள் பிறப்பது வீட்டு ஒளிக்கதிர்!அன்பும் அருளும் நிறைந்தவள்,காதல், கருணை கொடுப்பவள். தாயின் பாசத்துக்கு உருவமாகி,தந்தையின் பெயரை காப்பவள்.குடும்பத்தின் ஆசை மலராகி,நிலவாய் இரவுகளை நறுமணமாக்கும்! தெய்வம் தந்த மிகப்பெரிய செல்வம்,ஒரு வீட்டில் பிறக்கும் பெண் குழந்தை!அவளின் காலடி தெய்வத்தின் அடிச்சுவடு,அவளின் சிரிப்பு மணம் வீசும் பூந்தளிர்! பெண் குழந்தை பிறப்பது, இறைவன் நேராக வந்து வாழ்த்தியது…
Author: Thamizh
“தனிமையின் துணை”
தனிமை இல் தீங்கும் போது எழுதி வைத்த மனக்குரல், சிலர் இதை கவிதை என்கிறார்கள், பலர் இதை கழிவறை என்கிறார்கள். ஆனால், எனக்கோ இது தான்… தனிமை இல் நான் கண்ட துணை என்பேன்
“புத்தாண்டு பகுப்பாய்வு”
எல்லா நாள் போல் புத்தாண்டும் ஒரு நாள் தான் இதை ஏன் கொண்டாடுகிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன் ஏன் என்றால்? இந்த நாள் நாம் கடந்து வந்த 365 நாட்களின்தேர்வு என்பேன் இந்த தேர்வில் மதிப்பெண் இல்லை இந்த பொன் போன்ற நாளில் நாம் சுய பகுப்பாய்வு செய்ய வேண்டும் அதில் நாம் செய்தசாதனைகளுக்கான பாராட்டு, செய்த தவறில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் ,மற்றும் அடுத்து தேர்வுக்கான தயாரிப்பு திட்டம் தான்… இந்த இனிய நாள் என்கிறேன்….
“நிலைத்திருக்கும் தொடர்கதை”
வேர் மொழியில் பேசும் போது எப்போது இந்த உரையாடல் முடிந்துவிடும் என்று தோன்றும். தமிழ் பேசும் போது என்னை அறியாத இன்பம் உள்ளத்தில் உதிக்கும். இந்த உரையாடல் தொடர்கதை போல் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறே